மேலும் செய்திகள்
பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து சாவு
08-Mar-2025
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நகரில் உள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, சீர் வரிசை எடுத்து வந்து, அனைத்து மதத்தி-னரும் மசூதிக்கு சென்று ரமலான் வாழ்த்து தெரிவித்த, சமூக மத-நல்லிணக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி சுப்பிரமணி தலைமையில், ஊத்-தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன், வர்த்தக சங்க செயலாளர் உமா-பதி, அரிமா சங்க தலைவர் ராஜா உட்பட ஏராளமான பொது-மக்கள் ஒன்றிணைந்து, மசூதிக்கு சென்று ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்து பொதுமக்கள் சார்பில், முஸ்லிம்களை பெருமைப்படுத்தும் விதமாக சீர்வரிசை தட்டுகளாக, பேரிச்சம்பழம், கல்கண்டு, பழங்கள் எடுத்துச் சென்று மசூதி முத்தஅல்லி, செயலாளர், தலைவர் மற்றும் நண்பர்களிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டனர்.
08-Mar-2025