உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரி -- மொரப்பூர் ரயில் பாதை திட்டம் நிலங்களை கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு

தர்மபுரி -- மொரப்பூர் ரயில் பாதை திட்டம் நிலங்களை கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு

தர்மபுரி:தர்மபுரி -- மொரப்பூர் ரயில் பாதை திட்டத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தர்மபுரி அருகே ஏ.ரெட்டிஅள்ளியில், தர்மபுரி - மொரப்பூர் ரயில்பாதை திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்தும் பணிகள், தனி தாசில்தார் நிலம் எடுப்புப்பிரிவு குழுவினரால், நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கீழ் மாட்டுக்காரனுாரிலிருந்து ஏ.ரெட்டிஅள்ளி வரை, ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலத்தை அளவீடு செய்யும் பணிகள், தனி தாசில்தார்கள் சரவணன், கண்ணன் மற்றும் தர்மபுரி வருவாய் தாசில்தார் சுகுமார் ஆகியோர் மேற்கொண்டனர். இத்திட்டத்துக்காக கையகப்படுத்தும் பணியில், 5 ஹெக்டர் பரப்பளவில் விளை நிலங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன. இந்நிலையில், தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்துக்காக விளை நிலங்கள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தினால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, விளைநிலங்களை கையகப்படுத்துவதை கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வருவாய்த்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நிலம் அளவீட்டு பணிகளை கைவிட்டு, அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை