நாட்டு கறவை மாடு வாங்க மானியம் கோரி மக்கள் மனு
தர்மபுரி: வத்தல் மலையை சேர்ந்த, பழங்குடியின மக்கள், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்., உட்பட்ட வத்தல் மலையில் பழங்குடியின மக்கள் வசிக்கிறோம். எங்களின் பிரதான தொழிலாக, விவசாயம் செய்து, காட்டு மாடுகள் வளர்த்து வந்தோம். காலப்போக்கில், காட்டு மாடுகள் குறைந்து விட்டன. இதில், நாட்டு மாடுகள் வளர்க்கும் நோக்கத்துடன் பொருளாதாரத்தை பெருக்க, நாட்டு மாடுகள் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றோம். எனவே, தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மூலம், 2 நாட்டு கறவை மாடுகள் வாங்க, 100 சதவீத மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்தனர்.