உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திருட மோட்டார் கிடைக்கலை கிணற்றில் உரம் கொட்டிய நபர்கள்

திருட மோட்டார் கிடைக்கலை கிணற்றில் உரம் கொட்டிய நபர்கள்

அரூர்:திருட வந்த கிணற்றில் மோட்டார் உள்ளிட்ட எதுவும் இல்லாததால், அருகில் இருந்த ரசாயன உரத்தை கிணற்றில் மர்ம நபர்கள் கொட்டிச் சென்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தாமரைகோழியம்பட்டி, கணபதிப்பட்டி, மத்தியம்பட்டி, கே.வேட்ரப்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், மின் மோட்டார் மற்றும் ஒயர்களை மர்ம நபர்கள் இரவில் திருடிச் செல்வதாக போலீசில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த, 16 இரவில், மத்தியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது விவசாய கிணற்றில், மின் மோட்டாரை திருட வந்தவர்கள், அங்கு மோட்டார் இல்லாததால் ஏமாற்றடைந்தனர். ஆத்திரமடைந்து மின்மோட்டார் அறையில் வைத்திருந்த ரசாயன உரத்தை கிணற்றில் கொட்டி, அட்டூழியம் செய்தனர். இதுகுறித்து, அரூர் டி.எஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !