உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்

மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு, பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம், வட்ட துணை செயலாளர் அருள்குமார் தலைமையில் நடந்தது. பாலக்கோடு அருகே உள்ள சீரண்டபுரம் கிராமத்தில் உள்ள பாறை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கன்வாடி கட்டடம், நுாலகம், சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !