ஏரிக்கரையில் 1,200 பனை விதைகள் நடவு
அரூர்: அரூர் அருகே ஏரிக்கரைகளில், 1,200 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. அடுத்த தலைமுறையை காக்க ஒன்றுபடுவோம் என்ற நோக்கில், ஜீனியர் சேம்பர் அரூர் கிளை சார்பில், ஆண்டுதோறும் பனை விதை நடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு, அரூர் அருகேயுள்ள கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நாயக்கன் ஏரி மற்றும் சிக்கம்பட்டி ஏரியில், 1,200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது. இதில், அரூர் துணை தாசில்தார் ரஞ்சித்குமார் பனை விதை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஜே.சி.ஐ., நிர்வாகிகள் சிற்றரசு, செந்தில், ஜெயகாந்தன்,சுரேஷ், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.