அரசு பள்ளியில் பனை விதை நடவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச் சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளி வளாகத்தில் பனை விதை நடும் பணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை மற்றும் மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.