உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் பா.ம.க., கொண்டாட்டம்

தர்மபுரியில் பா.ம.க., கொண்டாட்டம்

தர்மபுரி பா.ம.க., தலைவர் மற்றும் தேர்தலில், வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் போட்டியிட அங்கீகாரம் அளிக்க, கட்சியின் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் அளித்தது. இதை வரவேற்று, தர்மபுரி மாவட்ட, பா.ம.க., சார்பில், தர்மபுரி, பா.ம.க., -- எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் தலைமையில், தர்மபுரி, பா.ம.க., அலுவலகம் முன், பாட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் சுதாகிருஷ்ணன், மாம்பட்டி அன்பழகன் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை