மேலும் செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது ‘போக்சோ’
10-May-2026
அரூர்; தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்-தவர் கணேஷ், 30, இவர், கடந்தாண்டு அரூர் பகு-தியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறு-மியை, அரூர் அரசு மருத்துவமனையில் பரிசோ-தனை செய்ததில், 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.அரூரை சேர்ந்தவர் சம்பத், 28, இவர், 8 மாதங்க-ளுக்கு முன்பு, 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறு-மியை, அரூர் அரசு மருத்துவமனையில் பரிசோ-தனை செய்ததில், 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ், சம்பத் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
10-May-2026