உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஐப்பசி துவக்கத்தையொட்டி அம்மன் கோவிலில் பூஜை

ஐப்பசி துவக்கத்தையொட்டி அம்மன் கோவிலில் பூஜை

தர்மபுரி: தர்மபுரியில், ஐப்பசி மாத துவக்கத்தையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. தர்மபுரி நெவசாளர் காலனி ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில், பால், பன்னீர், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், கடைவீதி சவுடேஸ்வரி அம்மன் கோவில், வெளிபேட்டை தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில், அன்னசாகரம் அங்காளம்மன் கோவில், கொளகத்துார் பச்சையம்மன் கோவில், சோகத்துார் செல்லியம்மன் கோவில், ஆட்டுக்காரன்பட்டி ஒம்சக்தி மாரியம்மன் கோவில் உட்பட, தர்மபுரியிலுள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், சுவாமிக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ