உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இளவயது திருமணம் தடுத்து நிறுத்தம்

இளவயது திருமணம் தடுத்து நிறுத்தம்

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், செல்வசமுத்திரத்தை சேர்ந்த, 25 வயது வாலிபருக்கும், இன்று, மாப்பிள்ளை வீட்டில் திருமணம் செய்ய, இரு வீட்டாரும் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று, இருவரின் வீட்டுக்கும் சென்ற அரூர் ஆர்.ஐ., சத்தியபிரியா மற்றும் வருவாய்த்துறையினர், இருவரது வீட்டினரிடமும், இளம்வயது திருமணம் தடை செய்யப்பட்டுள்ளாகவும், இளம்வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மீறி, இளம்வயது திருமணம் செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !