பவானியில் மொபட் மீதுமோதிய தனியார் பஸ்
பவானி:ஈரோட்டில் இருந்து பவானிக்கு, 30க்கு மேற்பட்ட பயணிகளுடன், ஆர்.கே.எம்., தனியார் பஸ் நேற்று காலை புறப்பட்டது. மேட்டூரை சேர்ந்த வீரமணி, ௩௦, ஓட்டினார். ஆர்.என்.புதுார் பஸ் நிறுத்தம் அருகே, ௯:௦௦ மணிக்கு வந்தபோது, முன்னால் சென்ற மொபட் மீது பஸ் மோதியது. மொபட்டில் வந்த ஆர்.என்.புதுாரை சேர்ந்த பாபு, 50, தலையில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.