சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தர்மபுரி, தர்மபுரியில் நடந்த, சைக்கிள் போட்டியில் ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தர்மபுரி பிரிவு சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் விரைவு சைக்கிள் போட்டிகள் நடந்தன. போட்டியை, டி.ஆர்.ஓ., கவிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதன், 13 வயதுக்கு உட்பட் டோர் ஆண்கள் பிரிவில் அதகபாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சைலேஷ்குமார் முதலிடம், கே.அக்ரஹாரம் ஊரா ட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் கவியரசு இரண்டாமிடம், தர்மபுரி அரசு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண் மூன்றாமிடம் பெற்றனர். 15 வயதுக்குட்பட்ட பிரிவில் அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் இஷான் முதலிடம், சோகத்துார் வாரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர் திவ்யதர்ஷன் இரண்டாமிடம், அதகபாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ராகுல் மூன்றாமிடம் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கோகுலகண்ணன் முதலிடம், தர்மபுரி விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாண வர் கோபிராம் இரண்டாமிடம், இதே பள்ளியை சேர்ந்த அஷ்வின் மூன்றாமிடம் பிடித்தனர். இதேபோல், 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இப்போட்டிகளில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முறையே, 5,000, 3,000, 2,000ம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மேலும், நான்கு முதல், 10 வரை இடம் பிடித்தவர்களுக்கு தலா, 250 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.