உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவில்களை இடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவில்களை இடிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 17பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள கோவில்களை இடிக்க முற்படும் அதிகாரிகளை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், இந்து திருக்கோவில் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி, பா.ஜ., முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சாமியாபுரம் கூட்ரோடு, வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, சில கோவில்களை இடிக்க அதிகாரிகள் முற்படுவதை நிறுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு எனக்கூறி கோவில்களை இடிக்க முனைப்பு காட்டும் அதிகாரிகள், தனிநபர் ஆக்கிரமிப்புகள், மாற்று மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாக கட்டடங்கள், சென்றாய பெருமாள் கோவில் நிலம் என அனைத்து ஆக்கிரமிப்புகளையும், அகற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகளை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து திருக்கோவில் பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த சாமிக்கண்ணு, பெரியசாமி, பள்ளிப்பட்டி ராஜலிங்கம், வெங்கடசமுத்திரம் பெரியசாமி, சபரி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி