உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர், அடிப்படை வசதி கேட்டு மறியல்

குடிநீர், அடிப்படை வசதி கேட்டு மறியல்

பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, பொதுமக்கள் மறியல் -போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டு சின்ன ஏரி பகுதியில், 200க்கும் மேற்பட்டோர், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். இங்கு, குடிநீர் மற்றும் சாலை வசதி வேண்டி பலவேறு முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதனால், 3வது வார்டுக்கு உட்பட்ட வன்னியர் தெருவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், பாப்பாரப்பட்டி - பாலக்கோடு சாலையில், தமிழக வெற்றி கழக கட்சி தொண்-டர்கள் ஆதரவுடன், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம், பாப்பாரப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, முறையான குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை