உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், நேற்று தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில், பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட டி.ஏ., மற்றும் சரண் விடுப்பை உடனடியாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தலைமை ஆசிரியர் பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும். ஆண்டுதோறும் மே மாதம் ஆசிரியர் கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், பொருளாளர் பூபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி