உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குறைந்தபட்ச ஊதியம்கோரி ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம்கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:காரல் மார்க்ஸ் தினத்தை முன்னிட்டு, அறிவியல் அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவும், அதை அமல்படுத்த கோரியும், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஏ.ஐ.டி.யூ.சி., யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் காசிவிஸ்வநாதன், மாநில துணை தலைவர் மணி உள்ளிட்டோர் மத்திய, மாநில அரசுகள், அறிவியல் அடிப்படையில் பணியாளர்களுக்கு குறைபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை