உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் வழங்க கேட்டு மறியல்

குடிநீர் வழங்க கேட்டு மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 9வது வார்டு தர்மபுரி மெயின் ரோட்டில் வசிக்கும், 100க்கும் மேற்பட்டோருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு குழாய்க்கு, 4 குடும்பங்கள் என பிரிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. பொம்மிடி - தர்மபுரி மெயின் ரோட்டின் இடது புறமாக உள்ளவர்களுக்கு குடிநீர் குறைவாக வழங்கப்படுகிறது எனக்கூறி நேற்று காலை, 10:00 மணியளவில் தர்மபுரி சேலம் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ், செயல் அலுவலர் முத்து, பொம்மிடி எஸ்.ஐ., மாரப்பன் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி