உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய-ளிப்பு சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை, மாற்ற திட்டமிடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 1,290 கோடி ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு, 2025-26ம் ஆண்டிற்கு மனித சக்தி நாட்களை தமிழ்நாட்டிற்கு, 30 கோடியாக உயர்த்த வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தில் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும், 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ