உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 100 நாள் வேலை வழங்க கேட்டு பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை வழங்க கேட்டு பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பி.டி.ஓ., ஆபீஸ் முன், 100 நாள் வேலை கேட்டு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்ப்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தேவரசன் தலைமை வகித்தார். இ.கம்யூ., கட்சியின் தர்மபுரி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் ஆர்பாட்ட கோரிக்கை குறித்து ‍பேசினார். அப்போது, 100 நாள் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலைக்கொடு, 100 நாள் வேலையை உயர்த்தி, 200 நாட்களாக உயர்த்தி, தின ஊதியத்தை, 700 ரூபாயாக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ