உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அடிப்படை வசதிகள் கேட்டு கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

கடத்துார்: தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியம், மோட்டாங்குறிச்சி ஊராட்சியிலுள்ள, 8 கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் மோட்டாங்குறிச்சி கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வி.ஏ.ஓ., மற்றும் பஞ்., அலுவலகம் இருந்தும், நத்தமேடு கிராமத்தில், ஒரு சமுதாயக்கூடத்தில் இந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முறையாக மோட்டாங்குறிச்சி கிராமத்திலுள்ள அலுவலகங்களுக்கு அதிகாரிகள் வருவதில்லை. அதிகாரிகளை தேடி மக்கள் அலையும் நிலை உள்ளது. பஞ்., அலுவலகம் இருந்தும், ஒரு நாள் கூட தலைவர்களாக இருந்தவர்களும், ஊராட்சி செயலர்களும் வந்ததில்லை. இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த சின்னசாமி கூறுகையில்,''மோட்டாங்குறிச்சியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு வசதி உள்ளிட்டவை கடந்த, 10 ஆண்டுகளாக செய்யப்படவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தியும், வி.ஏ.ஓ., மற்றும் பஞ்., அலுவலகம் மோட்டாங்குறிச்சியில் செயல்பட வைக்க கோரிக்கை வைத்தும், கிராமத்தில் கறுப்பு கொடி கட்டி, கறுப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் பஞ்., அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ