மேலும் செய்திகள்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
10-Sep-2025
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த தா.அய்யம்பட்டியிலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்தாண்டு பொதுத்தேர்வில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதனால், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் ஒன்றாக தொடர்ந்து திகழ்கிறது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் மாதையன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர், வேலுசாமி, 500க்கு, 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த, 16 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
10-Sep-2025