உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரூர்,: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், வீரப்பநாயக்கன்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கூடலுாரில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, கோட்டப்பட்டி மற்றும் சிட்லிங் பஞ்., வேலனுாரில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பழனியப்பன் வழங்-கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்-கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் ஜெய்னுலாப்தீன், மேற்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ண-மூர்த்தி, நிர்வாகிகள் ரஜினிமாறன், சண்முகம், செல்வம், உமா-பதி, தயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை