உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்

'தர்மபுரி, தர்மபுரி டவுன் மதிகோண்பாளையத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மாவட்ட கலெக்டர் சதீஸ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர், திருமண நிதியுதவி திட்டத்தில், 18 பயனாளிக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் நிருபர்களிடம் கூறுகையில்,''தர்மபுரி மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் அக்., 3 வரை, 176 முகாம் நடக்கவுள்ளது. இத்திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில், 33, ஊரக பகுதிகளில், 143 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. நகர்ப்புறங்களில், 13 அரசு துறைகளை சார்ந்த, 43 சேவைகளும், ஊரக பகுதிகளில், 15 அரசு துறைகளை சார்ந்த, 46 சேவைகள் வழங்கப்பட உள்ளது,'' என்றார். மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், நகராட்சி சேர்மன் லட்சுமி, துணை சேர்மன் நித்யா, தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, மாவட்ட சமூக நல அலுவலர் கலாவதி, நகராட்சி கமிஷ்னர் சேகர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.* அரூர் பஸ் ஸ்டாண்ட் அரு‍கே காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, டவுன் பஞ்., தலைவர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் அலைமோதியது. மகளிர் உரிமை தொகை தொடர்பான சேவைக்கு மட்டும், 4 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவைகள் கோரி, பொதுமக்கள் விண்ணப்பம் அளித்தனர்.* பாலக்கோடு அடுத்த அமானிமல்லாபுரம் கிராமத்தில், டி.ஆர்.ஓ., கவிதா தலைமையில் முகாம் நடந்தது. மகளிர் உரிமை தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி, 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். முகாமில் டி.எஸ்.பி மனோகரன், தாசில்தார், பி.டி.ஓ.,க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலப்பம்பாடியில், அரகாசன அள்ளி, சின்னம்பள்ளி, கலம்பாடி ஆகிய மூன்று பஞ்சாயத்தில் உள்ளவர்களுக்கு முகாம் நடந்தது. முகாமை பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி தொடங்கி வைத்தார். முகாமை கலெக்டர் சதீஸ் பார்வையிட்டார். இதில், ஊரகவளர்ச்சித்துறை இணை ஆணையர் நர்மதா, பென்னாகரம் தாசில்தார் பிரசன்னமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ