மேலும் செய்திகள்
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை அறிமுகம்
24-Nov-2025
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின், தர்மபுரி-, கிருஷ்ணகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதில் பணிபுரியும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில், மஹிந்திரா பொலிரோ கார் உள்ளது. இதன் டிரைவர் முருகன், 45, காருக்கு டீசல் போட நேற்று காலை, 10:20 மணிக்கு தேவரசம்பட்டி பெட்ரோல் பங்கிற்கு சென்றார். டிரைவர் கீழே இறங்கிய நிலையில், கார் தானாக, 50 அடி வரை நகர்ந்து, சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலைக்கு வந்ததால், அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்து ஓடி வந்த டிரைவர் முருகன், சாலைக்கு வந்த காரை, மீண்டும் பங்கில் கொண்டு சென்று நிறுத்தினார். அப்போது, அங்கிருந்த மக்கள் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கப்பட்ட காரை, 15 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வருவதால், ஹேண்ட் பிரேக் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளமாக இருந்த இடத்தில் கார் தானாக சாலைக்கு சென்றிருக்கலாம்' என்றனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Nov-2025