மேலும் செய்திகள்
ராகவேந்திரா கோவிலில் 354வது ஆராதனை விழா
12-Aug-2025
பாலக்கோடு: பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில், ராகவேந்திர சுவாமியின், 354வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா ஆக., 8ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10ம் தேதி, பூர்வா ஆராதனை செய்து விழா தொடங்கியது. தொடர்ந்து, ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, மத்ய ஆராதனை வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று, ராகவேந்திர சுவாமிக்கு உத்தர ஆராதனை வழிபாடு நடந்தது.மேலும், ராகவேந்திர சுவாமியின், 1,008 நாமாவளி அர்ச்ச-னையை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது.
12-Aug-2025