உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்-நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த, 2010ல், 39.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கை, அப்போ-தைய துணை முதல்வரும், இன்றைய முதல்வ-ருமான ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த விளையாட்டு அரங்கில், காலை மற்றும் மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்-கொள்கின்றனர். மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பயிற்சி மேற்கொள்கின்-றனர்.இந்நிலையில் மைதானத்தில், சில இடங்களில் மட்டுமே மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் போதிய வெளிச்சம் இல்லாமல், இருட்டில் நடந்து செல்-வதால், அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்ப-டுத்தி தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி