உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தடுப்பணை கட்ட கோரிக்கை

தடுப்பணை கட்ட கோரிக்கை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,க்கு உட்பட்ட காரப்பாடி மலையில் இருந்து, மழைக்காலங்களில் ஏற்படும் காட்-டாற்று வெள்ளம் வரட்டாற்றில் கலக்கிறது. இதை தடுத்து வேப்-பம்பட்டி பஞ்., மல்லுாத்து அருகே, தடுப்பணை கட்ட வேண்டும். இதன் மூலம் வேப்பம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, தீர்த்தமலை ஆகிய பஞ்.,களில் உள்ள கிராமங்களில் உள்ள விவ-சாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னையும் தீரும். எனவே தடுப்பணை கட்ட, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை