உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

தர்மபுரி:தர்மபுரி - பாலக்கோடு நெடுஞ்சாலையில், பழைய தர்மபுரி அடுத்த சவுளுர் அருகே, சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இதில், தர்மபுரியில் இருந்து வரும் வாகனங்கள் சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி - பாலக்கோடு புதிய, 4 வழி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. அதேபோல், மேம்பாலம் அருகிலுள்ள மாட்டுகாரனுார், சவுளுர் பகுதிகளுக்கு செல்ல, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலைகளில், சிறு குறு தொழில் நிறுவனங்கள், ரைஸ் மில்கள், பள்ளி கல்லுாரிகள் உள்ளது. இதனால், இங்குள்ள சர்வீஸ் சாலை, பிரிவு சாலைகளில் வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும்.பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் என அதிகப்படியான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், அப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், தர்மபுரியில் இருந்து சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வரும் வாகனங்கள், வரும் வேகத்தில் அப்படியே சர்வீஸ் சாலையில் திரும்பி செல்கின்றன. இதனால், பாலக்கோடு- - தர்மபுரி சாலையில் வரும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சவுளுர் மேம்பாலம் அருகிலுள்ள, நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை மற்றும் பிரிவு சாலைகளில் வேகத்தடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி