கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில், அபாயகரமான நிலையில் உள்ள, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட, 6 வது வார்டு புதுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், அப்பகுதிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும், அப்பகுதி தெருக்-களில் கழிவுநீர் கால்வாய்கள் மேல் அமைக்கப்பட்ட, கான்கிரீட் சிலாப்கள் தரமற்றதாக அமைக்கப்பட்டதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து விழுந்தது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அச்சத்துடன் தெருவை கடக்கின்-றனர். எனவே, தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சிலாப்-களை அகற்றிவிட்டு, புதிதாக தரமான சிலாப்களை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.