உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்ககோரி தீர்மானம்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்ககோரி தீர்மானம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை, வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணியில், பா.ஜ.,வுக்கு ஒதுக்க வேண்டும் என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடத்துாரில் நடந்தது. தொகுதி அமைப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், தொகுதி பொறுப்பாளர் சங்கீதா, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் சிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓ.பி.சி.,அணி மாவட்ட செயலாளர் சிங்காரம் வரவேற்றார். மாவட்ட தலைவர் சரவணன் பேசினார். வரும் சட்டசபை தேர்தலில், கூட்டணியில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பா.ஜ., போட்டியிடுவது என்றும், அதற்காக அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணியில் பாப்பிரெட்டிப்பட்டியை பா.ஜ.,வுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துவது, நவ., 4ல் சேலத்தில் நடக்கும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மண்டல தலைவர்கள் பிரவீன், சிற்றரசு, நாகராஜ், முனுசாமி, சிவா, நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடத்துார் மேற்கு ஒன்றிய தலைவர் பிரவீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை