உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசளித்து ஊக்குவிப்பு

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு பரிசளித்து ஊக்குவிப்பு

தர்மபுரி: தர்மபுரி, 4 ரோடு பகுதியில், போக்குவரத்து போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, பைக் ஓட்டுனர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். மேலும், பைக்கில் செல்லும்போது, அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், போக்குவரத்து போலீசார் சார்பில், எஸ்.ஐ., கோமதி, எஸ்.எஸ்.ஐ., ரகுநாதன் மற்றும் சிலம்பரசன், பார்த்தசாரதி தன்னார்வலர்கள் வெங்கடேஷ் பாபு, வக்கில் சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை