ஒகேனக்கல் குடிநீர் கேட்டு சாலை மறியல்
மொரப்பூர்: மொரப்பூர் அருகே, ஒகேனக்கல் குடிநீர் வழங்கக்கோரி, பொது-மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நவலை பஞ்., அண்-ணாமலைப்பட்டியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றனர். அருகிலுள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நடந்து வரும் நிலையில், அண்ணாமலைப்பட்டி கிராம மக்களுக்கு முறையாக ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்ப-டாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட, 50க்கும் மேற்-பட்டோர், நேற்று காலை, 6:45 மணிக்கு காலிக்குடங்களுடன், அரூர் - கிருஷ்ணகிரி சாலையில், அண்ணாமலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மொரப்பூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா பேச்சுவார்த்தை நடத்-தினார். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஒகே-னக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 7:30 மணிக்கு கலைந்து சென்றனர்.