உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு ஆண்கள் பள்ளியில் ரோபோடிக் ஆய்வகம்

அரசு ஆண்கள் பள்ளியில் ரோபோடிக் ஆய்வகம்

தர்மபுரி: தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில், 'ரோபோடிக்' ஆய்வகத்தை சி.இ.ஓ., ஜோதிசந்திரா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.பள்ளி கல்வித்துறை- ஒருங்கிணைந்த பள்ளிக்-கல்வி சார்பில், அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்க-ளிடம் செயல்முறை அடிப்படையிலான கற்-றலின் மூலம் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம் கருத்துகளை வலுப்படுத்த, பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்க, குழு-வாக இணைந்து செயல்படும் திறனை கற்றுக்-கொள்ள, படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் நடவ-டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி உள்பட, 15 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி என்ற அளவில், 15 அரசு பள்ளி-களில் இயந்திரவியல் 'ரோபோடிக்' ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை சி.இ.ஓ., ஜோதிசந்திரா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதில், மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள், தலைமை ஆசிரியர் காமராஜ், உதவி தலைமை ஆசிரியர் ராஜா, ஆசி-ரியர் பயிற்றுனர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி