புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்
புகையிலை பொருட்கள் விற்றகடைக்கு ரூ.25,000 அபராதம்பாப்பிரெட்டிப்பட்டி, செப். 27------மொரப்பூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், திருப்பதி உள்ளிட்ட குழுவினர், கடத்துார் பேரூராட்சி, புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், அய்யம்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என சோதனை நடத்தினர்.இதில், அய்யம்பட்டி பகுதி மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2 கிலோ பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து கடைக்கு, 'சீல்' வைத்தனர்.