உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / துாய்மை பணியாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி:ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளாட்சி மற்றும் பள்ளி துாய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், நிர்வாகிகள் மனோகரன், செல்வி தலைமை வகித்தனர். லட்சுமி, ஜெயக்கொடி, செல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில செயலாளர் முருகராஜ், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், சுகாதார ஊக்குனர்களுக்கு மார்ச் வரை நிலுவையின்றி, ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், 20,000 ரூபாய் வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரைத்தபடி, ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை