மேலும் செய்திகள்
தர்மபுரியில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
09-Sep-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துாய்மை பணியாளர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சுப்பு தலைமை வகித்தார். பொருளாளர் எல்லம்மாள், துணை தலைவர்கள் அஞ்சலா மீனாட்சி, ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட துணை செயலாளர்கள் பிரதாபன், மாதையன், அனிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களிடம் வருகை பதிவேட்டில் கையொப்பம் பெற வேண்டும், அரசு பள்ளி கல்வித்துறையில் இருக்கும் பள்ளியில், பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் மாத சம்பளத்தை, பிரதி மாதம், 5க்குள் பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி, 12,503 ரூபாய் பள்ளி கல்வித் துறையின் மூலம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
09-Sep-2025