உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 24, கூலித்தொழிலாளி; இவர், அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியிடம் பழகியுள்ளார். திரு-மண ஆசை வார்த்தை காட்டி நேரில் சந்தித்தவர், பாலியல் பலாத்-காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். இதையடுத்து கடந்த ஜன., 31ல் தள்ளப்பாடியில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தொடர்ந்து, திருநாவுக்கரசின் நண்பர் சுதாகர் வீட்டில், இரண்டு மாதம் தங்கியிருந்தனர். இந்நிலையில், தீர்த்த மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோத-னைக்காக மாணவி வந்துள்ளார். தகவலின்படி, தர்மபுரி குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்து மாணவியிடம் விசாரிக்கப்பட்டது. இது குறித்து, கோட்டப்பட்டி போலீசார் திருநாவுக்கரசு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ