மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு பயிற்சி
16-Aug-2025
பென்னாகரம், பென்னாகரம் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, பட்டு வளர்ப்பு தொழில்நுட்ப பரிமாற்ற பிரசார பயிற்சி கூட்டம் நடந்தது. இதை, மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை இணைந்து, 'என் பட்டு, என் பெருமை' என்ற திட்டத்தில், விவசாயிகளுக்காக நடத்தியது. இதில், மைசூர் மத்திய பட்டு வாரியத்தை சேர்ந்த விஞ்ஞாணி மகேஷ் பேசினார். அப்போது மண் பரிசோதணையின் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்து மண்ணுக்கு வேப்ப புண்ணாக்குடன் கலந்து உரமிட வேண்டும். மல்பொரி நாற்று நடவு முறை, தரமான இலை உற்பத்தி மற்றும் புழு வளர்ப்பு மனை கிருமி நீக்கம் செய்யும் முறை, சொட்டு நீர் பாசன் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளித்தார். இதில், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை அலுவலர்கள் அரங்கசாமி, வைரவேல், மதன் குமார், மற்றும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
16-Aug-2025