உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

அரூரில் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் அசோக்குமார் தலைமை வகித்தார். அரூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.முகாமில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, ஜாதி சான்றிதழ், விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை, முத்ரா கடன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். வங்கி கடனுதவி, தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, பழங்குடியினவாசிகள், 169 மனுக்களை அளித்தனர். முகாமினையொட்டி, ஆதார் அட்டை சிறப்பு முகாம், மருத்துவ முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை