மேலும் செய்திகள்
பணியாளர்களுக்கு சீருடை, இனிப்பு வழங்கல்
16-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி,கடத்துார் மின் கோட்டத்தில் பணியாற்றும் மின் பணியாளர்களுக்கு, மின் பாதுகாப்பு குறித்து சிறப்பு வகுப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. தர்மபுரி செயற்பொறியாளர்கள் கோமகள், சோபானதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட செயற்பொறியாளர் (மின்னியல்) ஜெயலட்சுமி பேசினார். இதில் மின் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் எடுத்துச் சென்று உயிருக்கும், உடமைக்கும், பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். எர்த்லோடு பயன்படுத்துவது அவசியம். பணியின் போது எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன், விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் அருண் பிரசாத், ரமேஷ், உதவி பொறியாளர் (பாதுகாப்பு) விஜய் உள்ளிட்ட பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
16-Oct-2025