அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி:தர்மபுரி அருகே சாலை மாரியம்மன் கோவிலில், நேற்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உட்பட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மேலும், வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதேபோல், பழைய தர்மபுரி சக்தி மாரியம்மன், அதியமான்கோட்டை காளியம்மன், தண்டுகாரம்பட்டி அருகேயுள்ள காலமாரியம்மன் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அதேபோல் தர்மபுரி அருகே, செந்தில்நகரில் உள்ள நாகர் புத்து கோவிலில் பெண்கள் பால், முட்டை ஆகியவை கொண்டு வந்து, புற்றில் ஊற்றி வழிபட்டனர்.* தர்மபுரி மாவட்டம், அரூர் சந்தைமேட்டில் உள்ள கோட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். இதே போல், அரூர் நான்குரோட்டில் உள்ள மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில், டி.அம்மாபேட்டை சென்னம்மாள் கோவில், எம்.வெளாம்பட்டி நல்லியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.* கடத்துார் காளியம்மன் மாரியம்மன் கோவில், பொ.மல்லாபுரம் முத்து மாரியம்மன் கோவில், பையர்நத்தம் பெரிய மாரியம்மன் கோவில், பாப்பிரெட்டிப்பட்டி மாரியம்மன், வாராஹி அம்மன் கோவில், இருளப்பட்டி காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யபட்டது.