உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

தர்மபுரி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், தர்மபுரி பிரிவு சார்பாக, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், கடந்த மாதம், 26 அன்று தொடங்கி பள்ளி, கல்லுாரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு பணியாளர்கள் என, 5 பிரிவுகளில் நடந்து வருகிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான, தடகளம், வாலிபால், எறிபந்து, கபாடி, இறகுபந்து, மேஜைப்பந்து ஆகிய போட்டிகளை, மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று தொடங்கி வைத்தார்.தர்மபுரி, பா.ம.க.,- - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், நகராட்சி சேர்மன் லட்சுமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை