உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காரிமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

காரிமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், கண்ணபெருமாள், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தர்மபுரி கலெக்டர் சதீஷ், எம்.பி., மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, இலவச வீடு உள்ளிட்டவை தொடர்பாக, 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.இன்ஸ்பெக்டர் பார்த்திபன், காரிமங்கலம் செயல் அலுவலர் ஜீவானந்தம், வேளாண்துறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, மின்சாரத்துறை பொறியாளர் சுரேஷ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் மனு அளித்து, உடனடியாக 5- நிமிடத்தில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, பட்டா மாறுதல் ஆகியவை மனுதாரர் களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ