உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாநில அளவிலான சிலம்பம்: ஸ்டான்லி பள்ளி தகுதி

மாநில அளவிலான சிலம்பம்: ஸ்டான்லி பள்ளி தகுதி

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி. ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் நடந்த சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பெண்களுக்கான, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சுதர்ஷினி முதலிடம், ஜீவிகா, இரண்டாமிடம், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீதரணி, ஷர்மிலி, சுவேதாஸ்ரீ ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர்.ஆண்களுக்கான, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீஷர்மா ஒற்றைக்கம்பு வீச்சில் மூன்றாமிடம், ஹெலன், ஜெனிஸ் இரட்டை கம்பு வீச்சில் மூன்றாமிடம், நவினேஷ் மூன்றாமிடம், 19 - வயதுக்குட்பட்டோர் பிரிவில் அனிஷ் முதலிடம், சிவசங்கரன் இரண்டாமிடம், மோகித் மூன்றாமிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், திவ்யா மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரை பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த் பிரகாஷ், ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும், வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ