உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி திறப்பால் ஸ்டேஷனரி விற்பனை ஜோர்

பள்ளி திறப்பால் ஸ்டேஷனரி விற்பனை ஜோர்

அரூர், கோடை விடுமுறைக்குப்பின், நாளை, (ஜூன் 2ம்) தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. இதையொட்டி, தர்மபுரி மாவட்டம், அரூரில், பள்ளி மாணவ - -மாணவியருக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், பவுச், ஸ்கேல், வாட்டர் பாட்டில், உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் ஸ்டேஷனரி கடைகளிலும், ஸ்கூல் பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் விற்பனை செய்யும் கடைகளிலும் அவற்றை வாங்குவதற்கு மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கடைகளில் குவிந்தனர். இதனால், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ