உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வணிக வளாக கடைகள் சீரமைக்க நடவடிக்கை

வணிக வளாக கடைகள் சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை பஸ் ஸ்டாண்டில், வணிக வளாகத்திலுள்ள கடைகளின் கட்டட மோல்டிங் பழுதடைந்துள்ளது. அங்கு கடை வைத்துள்ளவர்கள், கடைகளை சீரமைக்க கோரி நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று அப்பகுதிக்கு சென்ற அவர், நகராட்சி இளநிலை பொறியாளர் உலகநாதன், உதவி பொறியாளர் மணிராஜா ஆகியோரை அழைத்து, பழுதடைந்த கட்டடங்களை உடனடியாக சீரமைத்து தரக்கூறினார். அதேபோல பஸ் ஸ்டாண்டில் தகவல் ஒலிபெருக்கி இல்லை. அதை செய்து தரும்படி, கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு கோரிக்கை விடுத்தார். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், தன் சொந்த நிதியில், பஸ் ஸ்டாண்டில் தகவல் ஒலிபெருக்கி அமைத்து தருவதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ