உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குண்டும் குழியுமான சாலையால் அவதி

குண்டும் குழியுமான சாலையால் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மோளையானுார் ஊராட்சி. இங்கு, 3,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மோளையானுாரில் இருந்து தர்மபுரி மெயின் ரோடுக்கு செல்லும் சாலை, சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. சாலையில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'மோளையானுார்- தர்மபுரி மெயின் ரோடு வரை உள்ள சாலை வழியாக விழுதிப்பட்டி, மெணசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான ஏழை மாணவ, மாணவியர் தமிழக அரசு வழங்கிய இலவச சைக்கிளில், மோளையானுார், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், முதியவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை