உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

பொன்மயில் வாகனத்தில்சுவாமி திருவீதி உலா தர்மபுரி, நவ. 10-கந்த சஷ்டியையொட்டி, தர்மபுரி குமாரசுவாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.தர்மபுரி, குமாரசுவாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த, 2ல் துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. கடந்த, 7ல் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பூர்த்தி ஹோமம், இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் இரவு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், சுவாமிக்கு உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. பின், பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ