உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வீரவணக்க பேரணி

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வீரவணக்க பேரணி

பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வீரவணக்க பேரணி நேற்று, நடந்தது. மின்கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மரணமடைந்த நாராயணசாமி நாயுடு நினைவாக நடந்த பேரணி, பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பழனியப்பன், செயலாளர் முருகன், பொருளாளர் சக்திவேல் தலைமை வகித்தனர். தர்மபுரி மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் யோகானந்த மணி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், உதயகுமார், ராஜ்குமார், உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பேரணி நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !